வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?
''இப்போதெல்லாம்
போலி வாக்குறுதிகளை நம்பி இடம் வாங்கி ஏமாறுவது பெருகி வருகிறது. அதற்கு
மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான் காரணம். இடம் வாங்குவதில் உள்ள
சட்டக் கூறுகள் தெரியாமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்ளும்
மக்கள் பலர். ஓர் இடம் வாங்க முடிவு செய்து விட்டால், பத்திரப் பதிவுக்கு
முன் பரிசீலிக்க வேண்டிய 13 முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை
ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்''
இடம் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது... வில்லங்கப் பத்திரம். குறைந்தபட்சம் அந்த நிலத்தைப் பற்றிய 30 ஆண்டு கால பத்திர விவரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தகுந்த கட்டணம் செலுத்திப் பெற்று, அதை சட்ட ஆலோசகர் மூலம் படித்துப் பார்த்து, எந்த ஒரு வில்லங்கமும் இல்லையெனில் அடுத்த படி ஏறலாம்.
குறிப்பிட்ட இடம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சி அலுவலகத்தில் சென்று இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த இடத்துக்கான வரி முறையாக, தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் மேற்படி அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தில் இருக்கும் உரிமையாளர்தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இடம் தொடர்பாக பொது அதிகார பத்திரம் (பவர்) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட மனையின் வரை படம் பெறுவது முக்கியம். இதற்கு முன்பு அந்த இடத்தில் கிணறு, குட்டை, குழி, போன்றவை இருந்து மூடப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். அது தெரியாமல் அங்கு வீட்டைக் கட்டினால், மழைக்காலத்தில் வீடு உள் இறங்கிவிடும்.
சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.
இடம் விற்பவரின் போட்டோ ஐ.டி. புரூஃப்-ஐ செக் செய்ய வேண்டும்.
லே - அவுட் மேப் கட்டாயம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு லே-அவுட் போடுகிறார்கள் என்றால்... ஸ்கூல், நீச்சல் குளம், வாட்டர் டேங்க் போன்றவை எங்கெங்கே வரப்போகின்றன என்பதையெல்லாம் குறிப்பிட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி கிடைக்கும். இந்த தகவல்கள் எல்லாம் லே-அவுட் மேப்பில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
இடத்தை விற்பவரின் ரத்த சொந்தங்களுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.
கைடு - லைன் வேல்யூ (ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை) தெரிந்துகொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
அக்ரிமென்ட் போடும் பட்சத்தில், அதையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது.
எல்லாவற்றுக்கும் இடைத்தரகரையே முன்னிறுத்தாமல், விலை உள்ளிட்ட பல விஷயங்களையும் விற்பனையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது. இது பல வகையில் நாம் ஏமாறாமல் காப்பாற்றும்.